கணினி மென்பொருள் தயாரிப்புக்கு வரி இல்லை – வன்பொருள் தயாரிப்புக்கு வரிஇலங்கையிலுள்ள மென்பொருள் (SoftWare) தயாரிப்பு நிறுவனங்களுக்கு எவ்வித வரியும் அறவிடப்பட மாட்டாது என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவிததுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.வரி அற்ற முறையிலேயே, உள்நாட்டு ரீதியிலான மென்பொருள்களை (SoftWare) தயாரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

எனினும், கணினி வன்பொருள் (HardWare) தயாரிப்பிற்கு சில தற்காலிக வரிகள் அறவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள அசாதாரண சூழ்நிலையினால், அரசாங்கம் என்ற விதத்தில் சில தீர்மானங்களை எட்ட வேண்டிய கட்டாயம் காணப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

எனினும், இது நீண்டகால திட்டம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.உள்நாட்டில் வன்பொருள் (HardWare) தயாரிப்பு நிறுவனங்களை ஸ்தாபிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவம் நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

இதன்படி, ஹம்பாந்தோட்டை – சூரியவெவ பகுதியில் வன்பொருள் (HardWare) தயாரிப்பு நிறுவனமொன்றிற்கான காணி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதியில் அதனை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சூரியவெவ பகுதியில் கணினி வன்பொருள் (HardWare) நிறுவனமொன்று தற்போதும் செயற்பட்டு வருவதாக அவர் கூறுகின்றார்.

வரி அறவீடு என்பது குறுகிய கால நடவடிக்கை எனவும், அது நீண்ட கால நடவடிக்கையாக இருக்காது எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்

hey