கொழும்பில் நிரந்தர மற்றும் தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு முக்கிய தகவல்கொழும்பு மாநகர சபை பிரதேசத்தில் நிரந்தர மற்றும் தற்காலி குடியிருப்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று முதல் இலவசமாக கொவிட் பரிசோதனை மேற்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ரெபிட் என்டிஜன் பரிசோதனையை இந்த முறையில் மேற்கொள்ள முடியும் கொழும்பு நகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இன்று முதல் பொரளை கெம்பல் மைதானத்தில் இந்த பரிசோதனை நடவடிக்கைகளை இலவசமாக மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிற்றுகிழமையை தவிர்த்து ஏனைய நாட்களில் காலை 9 முதல் 12 மணி வரை இலவசமாக இந்த பரிசோதனைகளை மேற்கொள்ள முடியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

hey