தனியார் வைத்தியசாலையில் அன்டிஜென் பரிசோதனை செய்வது தொடர்பில் வெளியாகிய அறிவிப்புபணம் செலுத்தி ஒரு நாள் தங்கியிருந்தால் மாத்திரமே அன்டிஜென் பரிசோதனை செய்ய முடியும் என சில தனியார் வைத்தியசாலைகள் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சுகாதார அமைச்சினால் அன்டிஜென் பரிசோதனைக்கு 2000 ரூபா விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அன்டிஜென் பரிசோதனை செய்வதை சில தனியார் வைத்தியசாலைகள் மற்றும் இரசாயன பகுப்பாய்வு நிலையங்கள் இடைநிறுத்தியுள்ளன.

இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே ஒரு நாள் வைத்தியசாலையில் தங்கியிருந்தால் மட்டுமே அன்டிஜென் பரிசோதனை செய்யப்படும் என சில தனியார் வைத்தியசாலைகள் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

இதன் காரணமாக அன்டிஜென் பரிசோதனைக்காக செல்லும் மக்கள் கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

hey