வவுனியா கல்வியற் கல்லூரியின் பீடாதிபதியாக கமலகுமார் அவர்கள் பதவியேற்புவவுனியா கல்வியற் கல்லூரியின் புதிய பீடாதிபதியாக குணரட்ணம் கமலகுமார் இன்று மதியம் பதியேற்றுள்ளார்.

வவுனியா கல்வியற் கல்லூரியின் பீடாதிபதியாக பதவி வகித்த சுவர்ணராஜா அவர்கள் ஓய்வு பெற்று சென்ற நிலையில் ஏற்பட்டிருந்த வெற்றிடத்திற்கே வவுனியா கல்வியற் கல்லூரியின் 5 ஆவது பீடாதிபதியாக கு.கமலகுமார் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், வவுனியா கல்வியற் கல்லூரியின் உப பீடாதியாகவும், ஆசிரியர் வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் முகாமையாளராகவும், சாரணியத்தின் வவுனியா மாவட்ட உதவி ஆணையாளராகவும் பதவி வகிந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இப் பதவியேற்பு நிகழ்வில் திருமதி கமலகுமார், உப பீடாதிபதிகள், கல்வி சார் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

hey