தலைமன்னாரில் இடம்பெற்ற கோர விபத்து : அவசரமாக குருதி தேவை : அனைவரும் பகிர்ந்து உதவுங்கள்



மன்னார் வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு

தலைமன்னாரில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து புகையிரதத்துடன் மோதியதில் 10 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை பேருந்து கடக்க முயன்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று மதியம் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் கொண்டு தலைமன்னார் நோக்கி பயணித்த பேருந்து, கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கிப் பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டது.

இதில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயம் அடைந்த நிலையில், அவர்கள் மன்னார் பொது வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு நிலவுவதால், குருதிக் கொடையாளர்களிடம் வைத்தியசாலை நிர்வாகம் குருதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அறியமுடிகிறது.

hey