9ஆம் திகதி முதல் மத அனுஷ்டானங்களில் ஈடுபட அனுமதிஅடுத்த வாரம் முதல் மத அனுஷ்டானங்களில் ஈடுபட சுகாதாரத் தரப்பு சகல மத ஸ்தலங்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளது.

இதன் பிரகாரம் எதிர்வரும் 09 ஆம் திகதி முதல் மத வழிபாடுகளில் ஈடுபட க ட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல்களில் தொ ழுகைகளில் ஈடுபட இதனூடாக அவகாசம் வழங்கப்பட்டுள்ளதோடு இது தொடர்பான விசேட சுற்றுநிருபம் இன்று (02) வெளியிடப்படுவதாக வக்பு சபை தலைவர் சப்ரி ஹலீம்தீன் தெரிவித்தார்.

இது தொடர்பான சுற்று நிருபம் சகல பள்ளிவாசல்களுக்கும் இன்று முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகா தார தரப்பினால் க ட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் தவி ர்ந்த நாடு முழுவதுமுள்ள சகல பள்ளிவாசல்களையும் திறக்க அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொ ரோ னா தொ ற்றை யடுத்து கடந்த இரு மாதங்களுக்கு மேலாக கோயில்கள், பள்ளிவாசல்கள், ஆலயங்கள் மற்றும் விஹாரைகளில் எந்தவித மத வழிபாடுகளும் இடம்பெறவில்லை.

கொ ரோ னா தொ ற்று கட்டு ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மத அனுஷ்டானங்களில் ஈடுபட அனுமதிக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

இந்த நிலையிலே எதிர்வரும் 09 ஆம் திகதி முதல் கட்டுப்பாடுகளுடன் மத வழிபாடுகளை மேற்கொள்ள சுகாதார சேவைப்பணிப்பாளர் அனுமதி வழங்கியிருந்தார்.

இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கூட்டுத் தொழுகைக்கோ ஜூம்ஆ தொழுகைக்கோ அனுமதி இல்லை. தனித்தனியாக சமூக இடைவெளியை பேணித் தொழவேண்டும் எனவும் வுளூ செய்யும் பிரதேசம் மூ டப்பட வேண்டும் எனவும் கூறிய வக்பு சபை, வழிகாட்டல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது.

hey