இலங்கைக்கு சுற்றுலா பயணம் வந்துள்ள 3 யுக்ரேன் நாட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிஇலங்கைக்கு சுற்றுலா பயணம் வந்துள்ள மேலும் 3 யுக்ரேன் நாட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரையில் 6 யுக்ரேன் நாட்டவர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளளதாக கொரோனா பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

நீண்டகாலமாக சுற்றுலா பயணிகளின் உள்வருகைக்காக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையம், நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டது. இதன்போது யுக்ரேன் சுற்றுலா பயணிகள் மாத்திரம் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்றைய தினம் இலங்கையில் 639 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய இலங்கையில் இதுவரையில் 42702 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

தற்போது வைத்தியசாலையில் 7884 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

hey