முல்லைத்தீவு வவுனிக்குளம் வான் பாய்கிறது : பார்வையிடுவதற்காக செல்லும் மக்கள் கூட்டம்வவுனிக்குளத்தின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளத்தின் நீர்மட்டம் 26 அடியைக் கடந்துள்ள நிலையில் குளத்தின் நீர் வான் பாய்ந்து வருகின்றது.
இந்த நிலையில் குறித்த வான் பாயும் காட்சியைக் காண்பதற்காக பல மக்கள் குறித்த பகுதிக்கு சென்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த வாரம் குறித்த பகுதியைப் பார்வையிடுவதற்காக வருகைதந்த வாகனமொன்று குளத்துக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பகுதியில் குளித்தல், மீன்பிடித்தல் நடவடிக்கைகள் நீர்ப்பாசன திணைக்களத்தினால் தடை செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும் தற்போது நாட்டில் நிலவுகின்ற கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காலப்பகுதிக்குள் இவ்வாறு வான் பாய்கின்ற காட்சிகளைப் பார்வையிடுவதற்காக வருகை தந்து ஏற்படுகின்ற அநியாய உயிரிழப்புகள் மற்றும் நோய் தாக்கங்களைக் கருத்தில்கொண்டு குறித்த பகுதிகளுக்கு மக்கள் அநாவசியமாக வருகை தருகின்ற நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

hey