வவுனியாவை சேர்ந்த 21 வயது பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுபோலி வீசாவைப் பயன்படுத்தி நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டார் ஊடாக பிரான்ஸுக்கு தப்பிச் செல்ல முயன்ற வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான தமிழ் யுவதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அவர் சமர்ப்பித்த பிரான்ஸ் வதிவிட வீசா போலியானது என விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவினரால் கண்டறியப்பட்டது.

இதனை அடுத்து, விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட குறித்த யுவதி மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-capital news-

hey