வவுனியாவில் மகளை ஏற்ற சென்ற தந்தை விபத்தில் ம ரணம்வவுனியா சைவப்பி்ரகாசா மகளிர் வித்தியாலயத்திற்கு அருகில் கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(17) அவர் ம ரணமடைந்தார்.

குறித்த பாடசாலையில் கல்விகற்கும் தனது மகளை ஏற்றிச் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரை பட்டா வாகனம் மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.

உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி்க்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று ம ரணமடைந்தார்.

சம்பவத்தில் வவுனியா ஒயார்சின்னக்குளத்தை சேர்ந்த க.சிறிஸ்கந்தராயா வயது 56 என்ற நபரே ம ரணமடைந்துள்ளார்.

hey