எ ச்சரிக்கை! 22-05-2020 கிருத்திகை அமாவாசை! மறந்தும் இந்த த வறை செய்யாதீர்கள்இந்த வைகாசி மாதம், அ மாவாசை தி தியும், கி ருத்திகை ந ட்சத்திரமும், ஒரே நாளில் வருகின்றது. அதாவது, 22-05-2020 இந்த தினத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது. என்பதை பற்றியும், அமாவாசை தினத்தில் வரக்கூடிய, நம் மனதில் நினைத்ததை நிறைவேற்றிக் கூடிய, சோ டசக்கலை நேரம் குறிப்பாக எப்போது வருகிறது என்பதை பற்றியும், இந்தப் பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

பலவகையான நன்மைகளை நமக்கு தரக்கூடிய இந்த நாளை சரியான முறையில் செலவிட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பதிவு.

பொதுவாகவே அமாவாசை நாள் அன்று, குலதெய்வ வழிபாட்டை யாரும் ம றக்கக்கூடாது. உங்களது குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அடுத்ததாக முன்னோர்களுக்கு செய்யும் கடமைகளை அவரவர் த வறாமல் செய்ய வேண்டியது அவசியம். இதே தினத்தில் கார்த்திகை நட்சத்திரமும் வருவதால் முருகனுக்கு விரதம் மேற்கொள்பவர்கள் தாராளமாக மேற்கொள்ளலாம்.

சோடசக்கலை நேரம்:

நம்முடைய சித்தர்கள் நாம் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வதற்காக, இந்த சோடசக்கலை நமக்கு சொல்லி வைத்துள்ளார்கள். குறிப்பாக இந்த வைகாசி அமாவாசை அன்று நீங்கள் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றிக்கொள்ள கடவுளை நினைத்து தியானம் செய்ய வேண்டிய அந்த சோடசக்கலை நேரம் என்பது “22-05-2020 அன்று இரவு 10.54 லிருந்து 12.54 மணி” வரை உள்ளது.

குறிப்பாக க டன் பி ரச்சினை உள்ளவர்கள், வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள், இந்த நேரத்தில் கடவுளை நினைத்துக் வரங்களை கேட்டால், விரைவாக கிடைக்கும் என்பது சித்தர்களின் கூற்று. சிறப்பான இந்த அமாவாசை தினத்தில், இந்த சோடசக்கலை நேரத்தை யாரும் தவற விட்டுவிட வேண்டாம். நிச்சயம் நீங்கள் வேண்டிய வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட இந்த வைகாசி அமாவாசை அன்று செய்யக்கூடாத அந்த தவறுகள் என்ன?

தாய், தந்தை (இவர்கள் இருவரில் எவர் ஒருவர் இல்லை என்றாலும்), இல்லாத ஆண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். கணவர் இல்லாத பெண்கள், இந்த அமாவாசை விரதத்தை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

திருமணம் ஆன பெண்களுக்கு தாய் தந்தை இல்லை என்றாலும், இந்த விரதம் இருக்கக்கூடாது. உங்களுடைய கணவர் இருக்கும் பட்சத்தில், உங்களுடைய தாய் தந்தை இல்லை என்றாலும், பரவாயில்லை! இந்த அமாவாசை விரதத்தை விரதத்தை மேற்கொள்ள வேண்டாம்.

கல்யாணம் ஆகாத பெண்களுக்கு, தாய் தந்தை இல்லை என்றாலும், நீங்கள் இந்த அமாவாசை விரதத்தை இருக்கக் கூடாது. உங்கள் உடன்பிறந்த சகோதரர்கள், அதாவது உங்கள் வீட்டின் ஆண் வாரிசுகள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

இந்த விரதத்தை எப்படி மேற்கொள்ளலாம்?

உங்கள் வீட்டு முறைப்படி அமாவாசை வழிபாட்டை முடித்து விட்டு, உங்கள் வீட்டில் இருக்கும் ஆண்கள் இந்த விரதத்தை மேற்கொண்டு, நீங்கள் சமைத்த சாப்பாட்டை, காக த்திற்கு வைத்து, அதன் பின்பு நீங்களும் உணவு அருந்த வேண்டும். முடிந்தால் யா ராவது ஒரு முதியவருக்கு வயிறார சாப்பாடு போட முடியுமா என்பதை பாருங்கள்! இந்த தினத்தில் இயலாமல் இருக்கும் வயதானவருக்கு உணவு கொடுப்பது மிகவும் நல்ல பலனைத் தரும். உங்களது முன்னோர்களின் ஆசீர்வாதமும், உங்கள் ப ரம்பரைக்கே க ட்டாயம் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

hey