வவுனியா சிறையில் கொரோனா தொற்றுக்குள்ளான கைதி கந்தக்காடு முகாமிற்கு அனுப்பி வைப்புவவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட திருகோணமலையை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்கு ஏற்பட்டிருப்பது இன்று இனங்காணப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், ஏனைய கைதிகள் உட்பட அவருடன் நெருங்கிப்பழகியவர்களுக்கு இன்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் கொரேனா தொற்றுக்குள்ளான கைதி இன்று மதியம் கந்தக்காடு முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில் ,

வவுனியா சிறைச்சாலையில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்ட 139 சிறைக்கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை 11 ஆம் திகதி திருகோணமலையிலிருந்து வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்ட கைதிக்கு நேற்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இன்று தொற்று இனங்காணப்பட்டுள்ளது.

இதையடுத்து அவருடன் தொடர்புபட்டு நெருங்கிப் பழகியவர்களுக்கும் இன்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தொற்றுக்குள்ளான கைதி கந்தக்காடு முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் ஏற்கனவே இனம்காணப்பட்ட தாய், மகள் உட்பட அவரின் குடும்ப உறுப்பினர்களான தந்தை இரு பிள்ளைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் இன்று கிடைக்கப்பெற்றது.

இதன்போது குடும்பத் தலைவர் வயது 38 , அவருடைய மகள் வயது 8, மகன் வயது 2 ஆகிய மூவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரேனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது .

இவர்களை தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என மேலும் தெரிவித்துள்ளனர்.

hey