வட , கிழக்கு மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை : வெளியாகிய அறிவிப்பு“புரவி” புயல் கரையை அண்மித்துக் கொண்டிருக்கும் நிலையில் வடகிழக்கு மாகாணங்களில் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியேறி திறந்த வெளிகளில் நடமாடுவது தடை செய்யப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க கூறியுள்ளார்.

புரவி சூறாவளி நாடுமுழுவதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணநாயக்க எச்சரித்துள்ளார். இன்று பிற்பகல் திணைக்களத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில்

அவர்கள் இருவரும் இவற்றைத் தெரவித்தனர். மேல், சபரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும். காற்றின் வேகமும் அதிகரிக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

வடகிழக்கு மாகாணங்களில் புயல் தாக்கும்போது திறந்த வெளியில் செல்வது அல்லது தங்குவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. புயலால் ஏற்பட்ட சொத்து சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். எனவே, உயிர்களைக் காப்பாற்ற மக்கள் முழு கவனம் செலுத்த வேண்டும்.

என்று இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

hey