வவுனியாவில் மோட்டார் சைக்கிளை மோதி தள்ளிய ஹயஸ் ரக வாகனம் : ஒருவர் படுகாயம்வவுனியா முதலாம் குறுக்குத்தெரு சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் ஹயஸ் ரக வாகனம் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது,

வவுனியா முதலாம் குறுக்குத்தெருவால் பயணித்த மோட்டார் சைக்கிள் சூசைபிள்ளையார்குள வீதியால் நகரை நோக்கி பயணித்த ஹயஸ் ரக வாகனம் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

hey