விரைவில் மீள திறக்கப்படும் கட்டுநாயக்க விமான நிலையம்வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குள் அனுமதிக்க கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அரசு விரைவில் மீள திறக்கவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வாரத்தில் இது குறித்த பேச்சு சுகாதார அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகளுக்கு இடையே நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

முதல் கட்டமாக 44 ஆயிரம் வரையான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை அழைக்கும் எதிர்பார்ப்பு இருக்கின்றது எனக் கூறப்படுகின்றது.

இந்தநிலையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey