வவுனியாவில் அமுல்படுத்தப்பட்ட உத்தரவினை மீறி திறக்கப்பட்ட சைவ உணவகம்வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள பிரபல சைவ உணவகம் சுகாதார பிரிவினரின் உத்தரவினை மீறி திறக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்துவரும் கொவிட் 19 தாக்கம் காரணமாக சுகாதார பிரிவினரின் தீர்மானங்களுக்கு அமைவாக வவுனியா சுகாதார பிரிவுக்குட்பட்ட உணவகங்கள் , குளிர்பானசாலைகள் மற்றும் உணவு விற்பனை செய்யும் திறந்த வெளி உணவகங்களில், அமர்ந்து உணவருந்துதல்

இம்மாதம் 6ம் திகதி தொடக்கம் மறு அறிவித்தல் வரை தடைசெய்யப்படுவதுடன் உணவுகளை பொதி செய்து மாத்திரம் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள் இதனை மீறி செயற்படும் உணவக உரிமையாளர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.மகேந்திரன் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் சுகாதார இடைவெளி , பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உத்தரவினையும் மீறி முன்பகுதியில் அமர்ந்திருந்து உணவருத்த அனுமதி மறுத்து வெளித்தெரியாத வகையில்

உணவகத்தின் பிற்பகுதியில் அமர்ந்து உணவருந்துதலுக்கு அதன் உரிமையாளரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு பொதுமக்களினால் முறைப்பாடும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த உணவகத்திற்கு மாத்திரம் அமர்ந்திருந்து உணவருந்த அனுமதி வழங்கியது யார்? என்பது மற்றைய உணவக உரிமையாளர்களினால் கேள்வியேழுப்பப்படுகின்றது.

hey