வவுனியாவில் வழமைக்கு திரும்பிய போக்குவரத்து சேவைகள் வழமைபோல் ஆரம்பம்வவுனியாவில்

கொவிட் 19 தாக்கம் காரணமாக நாடாளாவிய ரீதியில் பல பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளது.

கடந்த 10 நாட்களாக வவுனியாவிலிருந்து வடமாகாணத்திற்குட்பட்ட பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட பேரூந்து சேவை இடம்பெற்று வந்ததுடன் மாகாணங்கிடையிலான பேரூந்து சேவை முற்றாக தடை செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் மேல் மாகாணத்தில் இன்றையதினம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் காரணமாக வவுனியா மாவட்டத்தில் தடைப்பட்டிருந்த வடமாகாணம் உட்பட வெளி மாவட்டங்களுக்குரிய போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதுடன் கொழும்பு , அக்கரைப்பற்று பகுதிகளுக்காக போக்குவரத்து தொடர்ந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

புதிய பேரூந்து நிலையத்திற்குள் செல்லும் பயணிகளும் கைகழுவதற்குரிய வசதிகள் பேரூந்து நிலையத்தின் வாயிலில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் பணிகள் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

hey