வவுனியாவில் கொரோனா அச்சம் காரணமாக பிரபல ஹாட்வெயார் தற்காலிகமாக மூடப்பட்டதுவவுனியா, வேப்பங்குளம் பகுதியில் உள்ள பிரபல ஹாட்வெயார் ஒன்று இன்று மாலை தற்காலிகமாக மூடப்பட்டது.

வவுனியா வடக்கு பகுதியில் வீதி திருத்தப் பணியில் ஈடுபட்ட மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் அவர்கள் வந்து சென்ற வர்த்தக நிலையங்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை சுகாதார துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

அதன்படி குறித்த கொரோனா தொற்றாளர்கள் வந்து சென்றதாக கருதப்படும் வேப்பங்குளம் பகுதியில் உள்ள பிரபல ஹாட்வெயார் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டது.

hey