கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் மக்களுக்கான விசேட செய்தி!கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பி ரவேசிப்பதற்கான புதிய நெ டுஞ்சாலையொன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 9 மணியளவில் இந்த நி கழ்வு இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்ரசிறி மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் மேலதிக செயலாளர் சுனில் குணவர்தன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் இந்த கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக ஜனாதிபத கோட்டாபய ராஜபக்‌ஷ , பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்டவர்கள் நெடுஞ்சாலை அமைக்கப்பட வேண்டிதன் அவசியம் தொடர்பில் ஆலோசனை வழங்கியதாகவும் அதன் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்ரசிறி இதன்போது தெரிவித்துள்ளார்.

மூன்று மாத காலப்பகுதிக்குள் சுமார் 600 மில்லியன் ரூபா செலவில் குறித்த நெ டுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

hey