வவுனியா நகரசபைக்கு தமிழரசுக் கட்சியால் புதிய உறுப்பினர் நியமனம்வவுனியா நகரசபைக்கு தமிழரசுக் கட்சியினால் புதிய உறுப்பினர் ஒருவர் (16.10.2021) நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வவுனியா நகரசபைக்கு நகர வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பொற்ற ரி.கே.இராஜலிங்கம் பதவி விலகிய நிலையில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, வவுனியா, கற்குழி பகுதியைச் சேர்ந்த அ.ரேணுகா தமிழரசுக் கட்சியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த உறுப்பினருக்கான நியமனக் கடிதமானது தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ந.கருணாநிதியால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராஜா, முன்னாள் நகரசபை உறுப்பினர் ரி.கே.இராஜலிங்கம், கட்சியின் மாவட்ட பொருளாளர் க.கேதீஸ்வரன் மற்றும் திருமதி. கே.தர்சினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

hey