வவுனியாவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிபுரிந்து மரணமடைந்த சிறுமிக்கு நீதிவேண்டி கையெழுத்து போராட்டம்வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம்

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியதீன் வீட்டில் மரணித்த சிறுமி ஹிசாலியின் மரணத்திற்கு நீதி கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதற்காக வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா இலுபையடிச் சந்தியில் சுயாதீன இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (23.07) காலை முதல் மதியம் வரை இந்த கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது.

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் வீட்டில் பணிப் பெண்ணாக பணி புரிந்து மரணமடைந்த ஹிசாலினியின் மரணத்திற்கு நீதியான விசாரணை இடம்பெற்று, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் குறித்த கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது.

குறித்த கையெழுத்துப் போராட்டத்தின் பின் அதன் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு நீதி கோரி கையெழுத்திட்டனர்.

hey