இணையத்தளங்களில் பகிரப்படும் போலி தகவல்களால் மக்களிடையே பாரிய அச்சுறுத்தல்- தயாராகவுள்ளது சட்டமூலம்இணையத்தளங்களில் பகிரப்படும் போலி தகவல்களால் மக்களிடையே பாரிய அ ச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அதனை தடுக்கும் வகையில் சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஆகியோர் இணைந்து, இந்த யோசனையை முன்வைத்துள்ளனர். இணையத்தளங்களில் போலித் தகவல்கள் பகிரப்படுகின்றமையினால், பாரிய அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படுவதாக இந்த யோசனையில் கூறப்பட்டுள்ளது.

இதனால் சமுகங்களுக்கு இடையில் பிளவு ஏற்படுதல், வைராக்கியம் ஏற்படுதல், சமுகநல நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு பா திப்புக்கள் ஏற்படுதல் போன்ற விடயங்கள் ஏற்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறான போலி தகவல்களிலிருந்து சமுகத்தை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

hey