வவுனியாவில் பேருந்துடன் மோதுண்டு துவிச்சக்கரவண்டி விபத்து : முதியவர் படுகாயம்வவுனியா வைரவப்புளியங்குளத்தில் பேரூந்துடன் மோதுண்டு துவிச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் முதியவரோருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் நேற்று (15.12.2020) மாலை இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றுக்கொண்டு வவுனியா நகரிலிலுந்து புகையிரத நிலைய வீதியூடாக குருமன்காடு நோக்கி பேரூந்து பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் துவிச்சக்கரவண்டியில் பாதையில் மறுபக்கம் மாற முற்பட்ட முதியவரை பேரூந்து மோதித்தள்ளியுள்ளது.

இவ்விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த முதியவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் பேரூந்து , துவிச்சக்கரவண்டியினை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

hey