வவுனியா நெடுங்கேணியில் தொடர்ந்து 5 நாட்களாக மூடப்பட்டிருக்கும் வர்த்தக நிலையங்கள்வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்ட 14 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் நடமாடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் நெடுங்கேணி பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

தனியார் வீதி ஒப்பந்த பணியாளர்கள் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சமூக பரவலை தடுப்பதற்காக சுகாதார திணைக்களத்தினர் கடும் பிரயத்தனத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நெடுங்கேணி , அதனை அண்டியுள்ள பிரதேசங்கள் மற்றும் வீதி அபிவிருத்தி பணி மேற்கொள்ளப்படும் பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தினையும் மூடுமாறு சுகாதார பிரிவினர் விடுத்த வேண்டுகோளிக்கினங்க கடந்த 25ம் திகதியிலிருந்து அப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 5 நாட்களாக நெடுங்கேணி பிரதேசம் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்படுவதுடன் வீதி அபிவிருத்தி பணி பணியினை மேற்கொண்ட 82 நபர்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

hey