வவுனியாவில் இருந்து நெடுங்கேணியூடாக முல்லைத்தீவிற்கு சேவையில் ஈடுபட்ட பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு முக்கிய அறிவிப்புவவுனியாவில் இருந்து நெடுங்கேணியூடாக முல்லைத்தீவிற்கு சேவையில் ஈடுபட்ட பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை பீ.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு வவுனியா வடக்கிற்கு பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

வவுனியா – நெடுங்கேணி பகுதியில் வீதி திருத்தப்பணியில் ஈடுபட்டவர்களில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் சிலர் 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் வவுனியாவில் இருந்து நெடுங்கேணியூடாக முல்லைத்தீவு செல்லும் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

எனவே குறித்த திகதிகளில் காலை 5 மணியில் இருந்து காலை 10 மணி வரையான காலப்பகுதியில் நெடுங்கேணியூடாக முல்லைத்தீவு வழித்தடத்தில் பயணம் மேற்கொண்ட பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் உடனடியாக பொது சுகாதார பரிசோதகர்களை தொடர்பு கொண்டு தமக்கான பீ.சி.ஆர். பரிசோனைகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளதுடன், அவர்கள் தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறும் கோரியுள்ளனர்.

இதேவேளை, குறித்த திகதிகளில் குறிப்பிட்ட நேரத்தில் இப்பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளும் தமது பகுதி சுகாதார பரிசோதகர்களை தொடர்பு கொண்டு தம்மையும் பரிசோதனைக்குட்படுத்தி கொள்ளுமாறும் பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

hey