Thursday, May 9, 2024

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு : 69 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து வடகிழக்கில் 250 மைல் தொலைவில் உள்ள ஜஜர்கோட்டில் மையம் கொண்டிருந்த குறித்த நிலநடுக்கமானது 6.4 ரிக்டர் அளவுக்கோளில் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 69 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என உள்ளுர் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

பலரின் வீடுகள் இடிந்து விழுந்துள்ளதுடன், இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம் வெளியிட்டுள்ளது. மீட்பு பணிகள் முழுவீச்சில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேநேரம் பல இடங்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் ஹெலிகாப்டர் மூலம் ருகும் மற்றும் ஜாஜர்கோட்டை பார்வையிடுவார்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருத்துவக் குழுக்கள் மற்றும் மருந்துகளை ஏற்றிச் செல்ல 3 ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவம் அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular