Monday, May 20, 2024

வவுனியா – பேராறு நீர்த்தேக்க வான் கதவுகள் திறப்பு: மக்களுக்கு விடப்பட்ட கோரிக்கை

வவுனியா – பேராறு நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட உள்ளமையால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன், குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்து வருகின்றது.

அந்தவகையில் பேராறு நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைந்துள்ளது.இதன் காரணமாக பேராறு நீர்த் தேக்கத்தின் வான் கதவுகள் இரவு(03.11.2023)திறக்கப்படவுள்ளதால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

குறிப்பாக, பேராறு நீர்த்தேக்கத்தின் கீழ் உள்ள புதுக்குளம், சாஸ்திரி கூழாங்குளம், ஈச்சங்குளம், மருதமடு, பாலமோட்டை ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular