நாட்டில் தங்கியிருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் அமைச்சரவையின் அனுமதியின்றி 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற அறிவித்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட வீசா நீடிப்புகளை இரத்து செய்வதற்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கவில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் தங்கியுள்ள ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளை 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவிக்க அரசாங்கம் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.