Saturday, May 16, 2026

வவுனியா இராசேந்திரங்குளம் பகுதியில் உள்ள ஆடைத்தொழிச்சாலையில் தொடரும் சட்டவிரோத செயற்பாடுகள்..! பொலிஸார் தீவிர விசாரணை..!

- Advertisement -
- Advertisement -

வவுனியா இராசேந்திரங்குளம் பகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் உள்ள ஊழியர்கள் இருவர் விற்பனைக்காக கேரள கஞ்சாவினை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாகபொலிஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து குறித்த ஆடைத்தொழிற்சாலையில் விசாரணை நடாத்திய போது தொலைபேசிக்குள் வைத்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சாவினை மீட்டுள்ளனர்.

அதனை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் அதே பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளிற்காக வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அத்தோடு இச்சம்பவத்தில் 10 இற்கும் மேற்ப்பட்ட ஆடைத்தொழிச்சாலை ஊழியர்கள் தொடர்புபட்டுள்ளனர் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுகுறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular