வவுனியா பிரதேச செயலக கலாசார விழாவில் இளம் ஊடகவியலாளரான பாஸ்கரன் கதீஷன் அவர்களுக்கு ஊடகத்துறைக்கான கலாநேத்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

வவுனியா பிரதேச செயலகம் மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் வவுனியா பிரதேச கலாசார பேரவையும் பிரதேச கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்தும் பண்பாட்டு ஊர்திப்பவனியும் பிரதேச பண்பாட்டு விழாவும் -2025 இன்று (18.07.2025) மிகச்சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வவுனியா பிரதேசத்தில் கலைத்துறை வளர்ச்சிக்காக அளப்பரிய பங்களிப்பினை நல்கிய துறை சார்ந்த பத்து பேருக்கு கலாநேத்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.அந்த வகையில் வவுனியா மாவட்டத்தின் இளம் ஊடகவியலாளராக பாஸ்கரன் கதீஷன் அவர்களுக்கு பிரதேச செயலகத்தினால் கலைத்துறையினருக்கு வழங்கப்படும் விருதான கலாநேத்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.

மாவட்டத்தில் ஜந்து ஊடகவிலாளர்கள் மாத்திரமே கடமையாற்றிய சமயத்தில் 17வயதில் 2012ம் ஆண்டு இணையத்தளம் ஒன்றின் ஊடகவியலாளராக தம்மை வவுனியா மண்ணுக்கு அறிமுகமான அவர் பின்னர் அச்சுப்பத்திரிகைள் , பிரபல தொலைக்காட்சி என்பவற்றின் ஊடகவியலாராக 13வருடங்களாக மக்களின் பிரச்சனைகள் வெளிக்கோணர்ந்து வந்தமையுடன் , இலை மறைகளாக இருக்கும் கலைஞர்களை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கான அந்தஸ்ததை வழங்கியமை , கோவிட் காலப்பகுதியில் மக்களுக்கான நிவாரண பொருட்களை வழங்கியமை போன்ற பல்வேறு சேவைகளை இம் மண்ணுக்கு ஆற்றியமையுடன் தொடர்ச்சியாக அதனை முன்னெடுத்து வருகின்றார்.

வவுனியா பிரதேச செயலக கலாசார விழாவில் ஊடகத்திற்கான கலாநேத்ரா விருது ஊடகத் துறையில் சிறந்து விளங்கிய ஒருவருக்கு வழங்கப்படும். இது கலாசார விழாவின் ஒரு பகுதியாக ஊடகவியலாளர்களின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. இந்த விருது வவுனியா பிரதேச செயலகத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு கௌரவமாகும். ஊடகத்திற்கான கலாநேத்ரா விருது வவுனியா பிரதேசத்தில் ஊடகத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த ஒருவரை அங்கீகரித்து அவரது பணியை பாராட்டுவதற்க்காக வழங்கப்படுகிறது.

இந்த விருது கலாசார விழாவின் ஒரு முக்கிய அம்சமாகும். மேலும் இது ஊடகவியலாளர்களின் முயற்சிகளை ஊக்குவிக்கும் ஒரு வழியாகும். மேலும் அவரது பணி மற்றவர்களுக்கு ஒரு உத்வேகமாக அமையும். இந்த விருது ஊடகவியலாளர்களின் பங்களிப்பை கௌரவிப்பதன் மூலம் கலாசார விழுமியங்களை பாதுகாப்பதற்கும் பிரதேசத்தின் சமூக மேம்பாட்டிற்கு உதவுவதற்கும் ஒரு வழியாகும்.


