ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை துரித கதியில் குறைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
எனினும், இந்த வருடத்தில் 05 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் வரை 60க்கும் மேற்பட்ட டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கையும் 24 ஆக குறைந்துள்ளதாகவும், பெப்ரவரி மாதத்தில் 5,181 டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் இலங்கையில் 10,417 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர், இது கடந்த வருடம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மிக அதிக எண்ணிக்கையாகும்.
இதன்படி இந்த வருடம் நாட்டில் 15,598 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். பெப்ரவரி மாதத்தில், கொழும்பு மாவட்டத்திலிருந்து அதிகளவான நோயாளர்கள் இனங்காணப்பட்டதுடன், அந்த எண்ணிக்கை 3,359 ஆகும்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 3,245 டெங்கு நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 1,324 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 1,052 நோயாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.