Monday, May 20, 2024

நடந்து முடிந்த நிச்சியதார்தம்.. மகனின் திருமணத்தை பார்க்காமலேயே மறைந்த விஜயகாந்த்.. திருமணம் நடக்காமல் இருக்க இதுதான் காரணமா.?

திரைப்பட நடிகர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் விஜயகாந்த். இவர் கடந்த 1952 ஆம் வருடம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை ராமானுஜபுரம் கிராமத்தில் பிறந்தார்.

பின்பு சென்னைக்கு வந்து சினிமா வாய்ப்பு தேடி திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கியுள்ளார். கடந்த 1990-ல் பிரேமலதாவை திருமணம் செய்த விஜயகாந்துக்கு விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

சினிமா வாழ்க்கையில் இருந்த விஜயகாந்துக்கு அரசியலிலும் வரவேற்பு இருந்தமையால், 1993-ல் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தினர் சுயேட்சையாக போட்டியிட்டு பலரும் வெற்றி அடைந்தனர்.

இதனால் விஜயகாந்துக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருந்தாலும், அவ்வப்போது அதனை தெரிவித்தும் வந்தார். ஆனால் முழு நேர அரசியல் களமிறங்கவில்லை.

இந்த நிலையில் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி காலமானதாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. விஜயகாந்த்தின் மறைவு செய்தி கேட்டு தேமுதிக தொண்டர்களும், அவரது ரசிகர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர்.

 

இதற்கிடையில் சில வருடங்களுக்கு முன்பு விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு திருமண நிச்சயம் நடைபெற்றது. கீர்த்தனா என்பவருடன் அவருக்கு நிச்சயம் நடைபெற்றது. விஜயகாந்த்துக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் அவரின்றி, பிரேமலதா மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் தான் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் அவர்களது திருமண நிச்சய புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. ஆயினும் நீண்ட வருடங்களாக இவர்களது திருமணம் நடைபெறாமல் இருந்ததற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், உண்மையான காரணமாக விஜயகாந்தின் உடல்நிலை தான் இருந்தது.

இது ஒருபக்கம் இருந்தாலும் மோடியின் தலைமையில் தனது மகனின் திருமணத்தை நடத்த விஜயகாந்த் விரும்பியதாகவும் ஆனால் அதற்கான தேதிகள் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இருந்தாலும் விஜயகாந்த்தின் உடல்நிலை தொடர்ந்து மோசமானதாலும்; அவரை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டிய நிலையும் இருந்ததால் அவர்களது திருமணம் தள்ளிப் போனது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular