Monday, May 20, 2024

ஆடு, மாடு, குதிரை விவசாயம் என்று கிராமத்து வாழ்க்கையை அனுபவிக்கும் நடிகர் அர்ஜுன்.! அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்.!

90களில் தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் ஆக வலம் வந்தவர் அர்ஜுன். இவரது நடிப்பில் உருவான ஜென்டில்மேன் மற்றும் ஜெய்ஹிந்த் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றனர்.

90களில் கதாநாயகனாக நடித்து வந்த இவர் தற்போது  குணச்சித்திர வேடம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இவர் அஜித் குமாருடன் இணைந்து நடித்த மங்காத்தா என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து  மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.

விஷால் திரைப்படமான இரும்புத்திரை திரைப்படத்திலும் இவரது வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.

நடிப்பு மட்டும் இல்லாமல் இவர் ஒரு சிறந்த இயக்குனரும் கூட. ஏழுமலை, ஜெய் ஹிந்த், கர்ணா, வாத்தியார் போன்ற பல்வேறு வெற்றி படங்களையும் இயக்கியுள்ளார் அர்ஜுன். சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் இவருக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

அர்ஜுன் தனது மனைவி மற்றும் மகள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் ஒரு மாட்டு வண்டி மற்றும் ஒரு மாட்டைப் பயன்படுத்தி வழக்கமான கிராமப்புற வாழ்க்கையை நடத்துகிறார். இந்த படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

Most Popular