Monday, May 20, 2024

குணம் ஆகி சிங்கம் போல வீடு திரும்பிய விஜயகாந்த்.! சிகிச்சைக்கு பின்பு அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நடிகர் விஜயகாந்த்.!

திரைப்பட நடிகர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் விஜயகாந்த். இவர் கடந்த 1952 ஆம் வருடம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை ராமானுஜபுரம் கிராமத்தில் பிறந்தார்.

அதனைத் தொடர்ந்து, இவரது குடும்பம் சிறுவயதிலேயே மதுரைக்கு குடி பெயர்ந்தது. மதுரையில் வளர்ந்த விஜயகாந்த் சினிமா மீது மோகம் கொண்டு படிப்பின் மீது ஆர்வம் காட்டாமல், தந்தையின் கண்காணிப்பில் இயங்கி வந்த அரிசி ஆலையில் சிறு சிறு பணிகளை செய்து வந்தார்.

பின்பு சென்னைக்கு வந்து சினிமா வாய்ப்பு தேடி திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கியுள்ளார். கடந்த 1990-ல் பிரேமலதாவை திருமணம் செய்த விஜயகாந்துக்கு விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

சினிமா வாழ்க்கையில் இருந்த விஜயகாந்துக்கு அரசியலிலும் வரவேற்பு இருந்தமையால், 1993-ல் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தினர் சுயேட்சையாக போட்டியிட்டு பலரும் வெற்றி அடைந்தனர்.

இதனால் விஜயகாந்துக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருந்தாலும், அவ்வப்போது அதனை தெரிவித்தும் வந்தார். ஆனால் முழு நேர அரசியல் களமிறங்கவில்லை.

தனது வாழ்க்கையில் திரைப்பட நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும், பண்புள்ள மனிதராகவும், பிறரை வளர்த்து விடும் அன்புள்ள குணம் கொண்ட நபராகவும் விளங்கிய விஜயகாந்துக்கு 2011-ல் மதிப்புறு முனைவர் பட்டம், 2001-ல் கலைமாமணி விருது ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

அதன்பின் இவர் அரசியலில் முழுமையாக களமிறங்கிய நிலையில், தற்போது உடல்நலகுறைவு காரணமாக ஓய்வு எடுத்து வருகிறார். அவர் இன்று பத்திரமாக வீடு திரும்பியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர்களின் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, ரசிகர்கள் இப்போது இந்த தகவலை இணையதளத்தில் மற்ற ரசிகர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Most Popular