Monday, May 20, 2024

தன் மனைவியுடன் கோலாகலமாக திருமண நாளை கொண்டாடும் நடிகர் வைபவின் அழகிய புகைப்படங்கள்.!

நடிகர் வைபவ் ரெட்டி,தமிழில் “சரோஜா, மங்காத்தா” போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். இவர், இயக்குனர் ஏ. கோதண்டராமி ரெட்டியின் மகன் ஆவார்.

இவர் தனது தனது தந்தையின் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு ‘கோதவா’ என்னும் தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

ஆனால் இவரை தமிழ் சினிமாவில் முதலில் அறிமுகம் செய்தவர்  இயக்குனர் வெங்கட் பிரபு தான். வெங்கட் பிரபு இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான “சரோஜா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து “மங்காத்தா, சென்னை 28-2,” போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘மேயாத மான்’ படத்தின் மூலம் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் உருவாகினர்.

ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் ஒரு காலகட்டத்தில் கதாநாயகனாக நடிக்க தொடங்கிவிட்டார். டமால் டுமீல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களம் இறங்கினார்.இவர் கதாநாயகனாக நடித்த சிக்ஸர் படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.

இந்நிலையில் இவர் தனது மனைவியுடன் திருமண நாளை கொண்டாடியுள்ளார், இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

Most Popular