Monday, May 20, 2024

கோலாகலமாக நடந்த இயக்குனர் விஜய் மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்.!

இயக்குநர் ப்ரியதர்ஷனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் ஏ.எல். விஜய். இவர் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் இளைய மகன். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான ’கீரிடம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக இவர் கால்பதித்தார்.

அதை தொடர்ந்து பொய் சொல்ல போறோம், மதராசப்பட்டினம், தெய்வதிருமகள், சைவம் போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான அடையாளத்தை பதிவு செய்தார். இவர் இயக்கிய சில படங்கள் தமிழ் சினிமாவில் எவர்கிரீன் படங்களாக அமைந்தன.

தெய்வதிருமகள் படத்தின் போது அமலா பாலுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் காதலித்து வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால் அதை இருவருமே மறுத்தனர்.
அதை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில், ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தலைவா படத்தில் நடிக்க அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். மூன்று வருடங்கள் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2017ம் ஆண்டில் அவர்கள் இருவரும் விவகாரத்து பெற்றனர்.

தற்போது விஜய் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்,அவர்களுக்கு ஆண் குழந்தையும் உள்ளது. மகனின் முதல் பிறந்தநாளை விஜய் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

RELATED ARTICLES

Most Popular