Monday, May 20, 2024

குடும்பத்துடன் கோலாகலமாக திருமண நாளை கொண்டாடிய கலா மாஸ்டரின் அழகிய புகைப்படங்கள்.!

1982 ஆம் ஆண்டு தனது 12வது வயதில் ஒரு நடன உதவியாளராக அறிமுகமானார் கலா. இயக்குனர் கே பாலசந்தர் இயக்கிய “புன்னகை மன்னன்” படத்தில் தான் இவருக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது. 

தொடர்ந்து 1989ம் ஆண்டு “புதுப்புது அர்த்தங்கள்” படத்தில் நடன இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து கலா மாஸ்டர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஒரியா, பெங்காலி உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

 பல தேசிய விருதுகள், மாநில விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கலா மாஸ்டர் நடிகை மீனாவின் நெருங்கிய தோழி. நடிகர் மீனாவின் கணவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்தார்.கலா மாஸ்டர் மீனாவின் கூடவே இருந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டார்.

பல படங்களில் தொடர்ச்சியாக ஓய்வில்லாமல் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார்.இவரின் நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்தளவுக்கு பல முன்னணி நடிகர்களையும் ஆட வைத்து அசத்தியுள்ளார் கலா.

தற்போது இவர் தனது திருமண நாளை கொண்டாடி வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

Most Popular