Monday, October 14, 2024

நெளுக்குளம் – செட்டிகுளம் வீதியை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு..!

- Advertisement -
- Advertisement -

வவுனியா, பாவற்குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், நெளுக்குளம் – செட்டிகுளம் வீதியை இரவு பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரித்து 19.4 அடிக்கு நீர்மட்டம் உயர்வடைந்துள்ள நிலையில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் மேலும் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக, பாவற்குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதனால் நேரியகுளம் ஊடான நெளுக்குளம் – செட்டிகுளம் வீதியில் நீர் பாய்ந்து செல்வதால் பொதுமக்கள் குறித்த வீதியை பயன்படுத்துவதை நிறுத்தி மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular