Monday, January 13, 2025

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் 20 பேர் 9A சித்திகளை பெற்று சாதனை

- Advertisement -
- Advertisement -

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றையதினம் வெளியான நிலையில், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் 20 பேர் ஒன்பது ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

இதன்படி, 20 மாணவர்கள் ஒன்பது ஏ சித்திகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் பாடசாலைக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர். இதேவேளை 23 மாணவர்கள் 8 பாடங்களில் விசேட சித்திகளை பெற்றுள்ளனர்.

ஒன்பது பாடங்களில் விசேட சித்தி பெற்ற 20 பேரில் ஐந்து மாணவர்கள் ஆங்கில மொழி மூலம் பரீட்சை எழுதிய மாணவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

சிறப்பான சித்திகளைப் பெற்று மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வன்னி பிபிசி வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular