Thursday, June 20, 2024

2023 உயர்தர பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதி இன்று (04.10) அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள் அடுத்த ஆண்டு ( 2024)  ஜனவரி 04 ஆம் திகதி ஆரம்பமாகி 2024 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகளின் தலைவர் எ அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், முந்தைய பரீட்சை அமர்வில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும்  மறு ஆய்வு காரணமாக கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முன்னதாக 2023 உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள்,  உயர்தரப் பரீட்சை அமர்வு 2023 அமர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 06 முதல் 10 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் 2023 உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை https://onlineexams.gov.lk/onlineapps/ ஊடாகவோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk ஊடாகவோ சமர்ப்பிக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular