Monday, May 20, 2024

பிரம்மாண்டமாக நடந்த கனா காணும் காலங்கள் நடிகர்கள் திருமணம்..கடைசியில் டிவிஸ்ட்..கண் கலங்கிய தீபிகா

டிக் டாக் செயலி மூலம் பிரபலமானவர்தான் தீபிகா வெங்கடாசலம். இதில் அவர் பல வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்டு அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கனா காணும் காலங்கள் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்பொழுது இந்த தொடரில் அவர் அபி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இதே சீரியலில் நடித்து வருபவர் நடிகர் ராஜ் வெற்றி பிரபு. இவரும் தீபிகாவை போலவே டிக் டாக் மூலம் பிரபலமாகி கனா காணும் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சினிமாவை போல சின்னத்திரையிலும் பல காதல் கல்யாணங்கள் நடைபெற்று தான் வருகிறது. அதிலும் விஜய் தொலைக்காட்சி சீரியலில் நடித்த பல பிரபலங்கள் ரியல் ஜோடியாக மாறி உள்ளனர்.

அந்த வகையில் தற்பொழுது ராஜ் வெற்றி , தீபிகா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். தன்னை ஒருவர் ப்ரொபோஸ் செய்ததாக கடந்த மாதம் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் தீபிகா.இதை தொடர்ந்து அவர் ராஜ் வெற்றி என்று அறிவித்திருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னரே இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதிலாதொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. தற்பொழுது இவர்களின் திருமண வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

RELATED ARTICLES

Most Popular