Thursday, November 12, 2026

கே எஸ் ரவிக்குமாரின் மகள்களா இது..? சிறுவயதில் எப்படி இருக்காங்க பாருங்க…? பலரும் பார்த்திடாத புகைப்படம்

- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். இவர் திருவள்ளுவர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர். ஆரம்பத்தில் இயக்குனர் விக்ரமனிடம் இணை இயக்குனராக பணியாற்றினார். அதன்பிறகு 1990 ஆம் ஆண்டு வெளியான புரியாத புதிர் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இவர் இயக்கிய சேரன் பாண்டியன், புத்தம் புது பயணம், ஊர் மரியாதை, பொண்டாட்டி ராஜ்ஜியம், சூரியன் சந்திரன் போன்ற படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக இவருக்கு அமைந்தது. 1994 ஆம் ஆண்டு வெளியான நாட்டாமை திரைப்படம் இன்று முதல் மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்கத்தக்க படமாக இருந்தது. இந்த படத்திற்காக சிறந்த திரைப்படத்திற்கான தமிழக மாநில விருதையும், சிறந்த இயக்குனருக்கான தமிழக அரசு விருதையும் பெற்றார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து படையப்பா என்ற திரைப்படத்தை இயக்கினார். இப்படமானது சுமார் 100 நாட்களுக்கு மேல் திரையில் ஓடியது. சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில அரசின் விருதை பெற்றிருந்தார். நடிகர் சரத்குமாரை மட்டும் வைத்து சுமார் 12 படங்கள் இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இவர் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வெற்றி பெற்றது. இவர் கடைசியாக லிங்கா என்ற திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து இயக்கியிருந்தார். இவர் தெலுங்கிலும் பல படங்களை இயக்கியிருந்தார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் நடிப்பில் வெளியான திரைப்படம் கூகுள் குட்டப்பா. இப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.

இவர் இயக்குனராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர் நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர். இயக்குனர் கேஸ் ரவிக்குமார் கற்பகம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். தற்பொழுது இவரின் மகள் தனது தந்தையுடன் இருக்கும் பழைய புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். இதோ அந்த புகைப்படம் …

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular