Thursday, November 12, 2026

“சீரியல் நடிகைகளை திருமணம் செய்வதே தவறு”…. திருமணமாகி 9 வருடத்திற்கு பிறகு…!. மிர்ச்சி செந்தில் உருக்கமான பேட்டி

- Advertisement -
- Advertisement -

சமீபகாலமாகவே சோசியல் மீடியாவே எங்கு பார்த்தாலும் சீரியல் பிரபலங்கள் திருமணமாகி சில மாதங்களில் கருத்து வேறுபாடு பிரச்சனை வந்து பிரித்து வாழ்கின்றனர் .அப்படி திவ்யா-அர்னவ் மற்றும் விஷ்ணுகாந்த்-சம்யுக்தா பிரச்சனை தான் இணையத்தில் தற்போது வைரலாகி வந்தது. மேலும் இந்த தம்பதிகள் ஒருவர் மீது இன்னொருவர் போட்டிப் போட்டு கொண்டு குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தனர்.

இளம் ஜோடிகள் இவர்கள்தான் இப்படி இருக்கிறார்கள் என்று பார்த்தால் தற்பொழுது திருமணமாகி ஒன்பது வருடங்கள் பிறகு மிர்ச்சி செந்திலும் சீரியல் நடிகைகளை திருமணம் செய்வதே தவறு என்று வெளிப்படையாக ஒரு பேட்டியில் கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். விஜய் டிவியில் டிஆர்பி-யில் நம்பர் 1 சீரியலாக இருந்தது சரவணன் மீனாட்சி . அந்த சீரியலில் கதாநாயகனாக மிர்ச்சி செந்தில் நடித்திருந்தார். அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீஜா மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர்கள் இருவரும் அந்த சீரியல் மூலம் பலகி கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் மிர்ச்சி செந்தில் தன்னுடைய மனைவியை பற்றி பல விஷயங்களை ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இன்றைய காலகட்டத்தில் நடிகர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு என்றால் அவர்கள் அவர்களுடன் இணைந்து நடிக்கும் நடிகைகளை அந்த கேரக்டரில் வருவது போல் அந்த பெண் இருப்பார் என்று நினைத்து காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர்

ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை. நான் சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சி அமைதியாக இருப்பார் .மாமியார் சொல்வதை அப்படியே கேட்பார் என நினைத்து திருமணம் செய்து கொண்டேன். ஆனால் நிஜத்தில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் உடைய வேறு, ஸ்ரீஜாவின் குணாதிசயம் வேறு என்பது திருமணத்திற்கு பிறகு தான் எனக்கு புரிந்தது. ஸ்ரீஜா நான் ஏதாவது சொன்னால் நீ என்ன எனக்கு சொல்வது என்று பிடிவாதம் பிடிக்க கூடியவர்.

எடுத்த முடிவில் அவர் கடைசி வரை பிடிவாதமாக இருப்பார். யாருக்காகவும் அதை அவர் மாற்றிக் கொள்ள மாட்டார். அவர் நினைத்ததை முடிப்பதற்கு மிகவும் புத்திசாலித்தனமாக யோசித்து செயல்படுவார் என்று கூறி இருக்கிறார். ஆனால் சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சி அப்படி கிடையாது. நான் அந்த மீனாட்சியை விரும்பினேன்.

ஆனால் திருமணத்திற்கு பிறகு அது எனக்கு வேறு விதமாக அமைந்தது எனவும், இருப்பினும் காதலின் மகத்துவம் தெரிந்ததவர்களுக்கு சகிப்புத் தன்மை உடன் இருப்பது மேலும் அவர் காதலில் மகிமை தெரிந்தவர்கள் தான் சகிப்புத்தன்மையும் இருக்க வேண்டும் என்று மறைமுகமாக தனது திருமண வாழ்க்கையில் உள்ள கசப்பான அனுபவங்களை பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular