Friday, November 27, 2026

வவுனியா-வீரபுரம் பகுதியில் ஆசிரியரின் தங்கச் சங்கிலி அறுப்பு – இருவர் கைது

- Advertisement -
- Advertisement -

வவுனியா, வீரபுரம் சின்னத்தம்பனை பகுதியில் ஆசிரியர் ஒருவரின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்து எடுத்துச் சென்ற சம்பவம் தொடர்பில், சந்தேகநபர்கள் செட்டிகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி, வீரபுரம் சின்னத்தம்பனை பகுதியில் ஆசிரியர் ஒருவர் சென்றுகொண்டிருந்தபோது, முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத நபர்கள் அவரின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்து எடுத்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த செட்டிகுளம் பொலிஸார், கடந்த நவம்பர் மாதம் 25ஆம் திகதி சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular