Monday, May 20, 2024

தமிழீழம் மலரும் நாளே தமிழர்களுக்கு உண்மையான சுதந்திர நாளாகும்

ஈழத்தமிழருக்கு பெப்ரவரி 4 ஒரு கரிநாள். இந்த நாள் தமிழருக்கு சுதந்திர தினமாக எப்படி ஏற்க முடியும். ஈழத்தமிரைப் பொறுத்தவரையில் சுதந்திர தமிழீழம் மலரும் நாளே உண்மையான சுதந்திர நாளாகும்.இலட்சக்கணக்கானவர்களை இனஅழிப்புச் செய்த பேரினவாத சிங்கள அரசாங்கம், அதற்கான நீதியை மறுதலிக்கும் அதேநேரம், தமிழர் தாயகத்தின் இருப்பையும் கேள்விக்குள்ளாக்கி சிதைத்து வருகிறது

ஆங்கிலேயரிடம் இருந்து சிறிலங்கா சுதந்திரம் அடைந்திருந்தாலும் தமிழ் மக்களாகிய எமக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை . சிங்கள பேரினவாதஅரசின் திட்டமிடப்பட்ட கட்டமைக்கப்பட்ட தமிழினஅழிப்பு இன்றுவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

ஆங்கில ஏகாதிபத்தியத்திடமிருந்து இனவெறி பிடித்த சிங்கள அரசியல் தலைமைககளிடம் ஒப்படைக்கப்பட்ட ஆட்சியின் கைமாற்றமே அன்றி இது தமிழர்களுக்கான சுதந்திர நாள் அன்று .ஐரோப்பியர் வருகைக்கு முன் ஈழத்தமிழர்கள் தங்களுக்கே உரித்தான பாரம்பரியத்துடன் இயற்கையோடு ஒன்றிப் போய் வாழ்ந்தவர்கள். வாழ்வாதாரமாக விவசாயத்தையும் மீன்பிடியையும் பெருமளவில் நம்பி வாழ்ந்த தனித்துவமான வீரமிக்க தேசிய இனமே எமது தமிழினம்

எமது திருநாட்டின் வளங்களைச் சுரண்ட வாணிபம் என்கின்ற பெயரில் பெரும் ஆயுத பலத்துடன் வந்த 1580ஆம்அண்டு வந்தேறியவர்களான போர்த்துக்கீசியர்கள் அதனை தொடர்ந்து ஒல்லாந்த்தார்கள் அதனை தொடர்ந்து பிரித்தானியர்கள் என்று அன்னியர்களினால் எமது தமிழர் நிலங்களை, அடையாளங்களை, ஆட்சிமுறைகளை அழித்தனர். இலங்கையில் காலனித்துவத்தின் காலப்பகுதியிலும் பின்பும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு இன்றுவரை எந்த நீதியும் கிடைக்கவில்லை

முதன்முதலில் ஆட்சிப்பீடம் ஏறிய டி.எஸ் சேனநாயக்க முதல் இனப்படுகொலையாளி கோத்தபாய, ரணில் வரை சிங்கள பௌத்த பேரினவாத அரசுகள் அனைத்தும் ஒரே பேரினவாத கொள்கையை பின்பற்றி 1948 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை பல இலட்சம் அப்பாவி தமிழர்களை கொன்ற குவித்ததை எம்மால் மறக்க ஏலாது .

இலங்கைக்கு என்றோ ஒரு நாள் சுதந்திரம் பெற்றுத் சுயாட்சி அமைக்கும் என்று எந்தச் சிங்களத் தலைவர்களும் கனவிலும் கூட நினைக்கவில்லை. ஆனால் இலங்கைக்கு ஒரு நாள் தன்னாட்சி கிடைக்கும் என்ற நம்பிக்கையை சேர்.பொன். அருணாசலம், சேர்.பொன். இராமநாதன் ஆகியோரே முதன்முதலில் மக்கள் மத்தியில் ஏற்படுத்தினார்கள். தமிழீழம் என்கிற சொற்பதத்தை முதன்முதலில் உபயோகித்தியவர் சேர் பொன் அருணாச்சலம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். பின்னர் தமிழீழக் கொள்கையை முன்வைத்து முதன்முதலில் அரசியல் களத்தில் பணியாற்றத் தொடங்கியவர்கள் திரு. செ. சுந்தரலிங்கமும், வீ.நவரத்தினமும் ஆவார்கள்.

பல அர்ப்பணிப்புகள், இழப்புகள், ஏமாற்றங்களை தொடர்ச்சியாக சந்தித்து வரும் ஈழத்தமிழர்களின் அரசியல் வேணவாவை நிறைவேற்ற இன்றைய அரசியல்வாதிகள் ஒன்றுமில்லாத 13வது திருத்துச் சட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். ஒற்றையாட்சிக் கட்மைப்புக்குள் உள்ள 13ஐ ஏன் இவர்கள் கேட்கிறார்கள். இந்தியாவின் பூகோள அரசியலையும் நலன்களையும் பேணவா இவர்கள் ஈழத்தமிழர்களின் சுதந்திர தாகத்தை நிர்மூலமாக்குகிறார்கள்

2009 பேரிழப்புக்குப்பின், ஒரு ஆரம்ப புள்ளியாக் கூட ஏற்கமுடியாத 13ம்திருத்தச் சட்டதை மீண்டும் தூசி தட்டி புத்துயிர் வழங்கி, சிங்களத்தின் பாராளுமன்ற கதிரைகளை கைப்பற்ற கபட நாடகமாடும் போலித்தமிழ்த் தலைமைகளை இனங்கண்டு தமிழ் அரசியல் இருந்து விரட்டியடிக்க வேண்டிய நாளாக பெப்ரவரி கரிநாளாக இருக்கிறது

2013 ஆம் ஆண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் உருவாக்கப்பட்ட போதிலும், சிறிலங்கா அரசாங்கத்தால் எந்த அபிவிருத்தியும் தமிழர் பிரதேசங்களில் நடைபெறவில்லை. தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு அபிவிருத்திப் பணிகளையும் தடுக்கும் அதிகாரம் சிங்களவர்களைக் கொண்ட அரசினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களுக்கு மட்டுமே உண்டு.

தமிழர் தாயகத்தில் தனியாருக்குச் சொந்தமான அனைத்து வளமான பண்ணைகளும் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு தமிழர்கள் நிரந்தர வறுமையில் அடிமைப்படுத்தப்பட்டனர்

தமிழர் பிரதேசங்களில் இருந்து சிங்களக்குடியேற்றங்கள் அகற்றப்பட்டு, அடாத்தாக நிறுவப்பட்ட பௌத்த விகாரைகள் விலக்கப்பட்டு, அத்துமீறி அபகரிக்கப்பட்ட தமிழர் பூர்வீக நிலங்கள் திரும்பவும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு இராணுவம் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிய பின்னரே தமிழர்களுக்கு நிரந்தரமான சுதந்திர நாள் கிட்டும். அதுவரை பெப்ரவரி 4ம் திகதி ஈழத்தமிழர்களுக்கு கரிநாளே.

சிங்கள பேரினவாத அரசால் திட்டமிட்டு செய்யப்பட்ட இனஅழிப்புக்கு இன்றுவரை எந்த நீதியும் கிடைக்கவில்லை திட்டமிட்ட சிங்கள குடியேற்றம், தமிழர்களின் காணிகள் ஆக்கிரமிப்பு, புத்த விகாரைகள் அமைப்பு, இந்துக் கோவில்களை விகாரையாக்கும் முயற்சி, புனித பூமித் திட்டம் ஆகியவற்றை வேகமாக மேற்கொண்டு வருகின்றது. எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்று இன்றுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை தேடி வருடக்கணக்காக போராடி வருகிறார்கள், தமிழ் அரசியல் கைதிகள் 10 வருடங்களுக்கு மேலாக தமது விடுதலையை எதிர்பார்த்து சிறையில் வாடுகிறார்கள், தமது பூர்வீக நிலங்களை பறிகொடுத்துவிட்டு இன்றுவரை வீதியில் போராடி வருகிறார்கள்,

போர் முடிந்து 14 ஆண்டுகள் கழிந்தும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை, தமிழினப்இனப்படுகொலைக்கான நீதி கிடைக்கவில்லை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசு பொறுப்புக்கூறவில்லை. தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் இலங்கை அரசு ஏமாற்றி வருகிறது.இப்படி சிங்கள அரசின் அட்டூழியங்கள் இன்றுவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது .

தமது உரிமைகளுக்காக போராடும் மக்கள் கைதுசெய்யப்பட்டு அச்சுறுத்தப்படுகிறார்கள் இவ்வாறு தமிழர் தாயக்கதில் தமிழ் மக்களின் இருப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இந்த சுதந்திர நாளை நாம் கரிநாளாக பிரகடனப்படுத்தியே ஆகவேண்டும்

போதைவஸ்துப் பாவனை தமிழர்களிடையே திட்டமிட்டுப் புகுத்தப்பட்டு கலாசாரப் பிறழ்வுகள் ஊக்கிவிக்கப்படுகின்றன. இவற்றை கண்டும் காணாததுபோல சிங்கள அரசியல் தலைமைகள் உள்ளனர்

ஒரு பக்கம் போதைபொருள் ஒழிப்பு கைதுநடவடிக்கை என்று பொலிசார் வெறும் நாடகமாடி இன்னொரு பக்கம் போதைப் பொருள் கடத்தலுக்கு துணை போகும் நிலைமையே இருக்கிறது இளைய தலைமுறைகள் போதைக்கு அடிமையாகி தறிகெட்டு திரிகின்ற சிறிலங்காவில் எப்படி சுதந்திர தினம் என்று சொல்ல முடியும் ,

1948 ஆம் ஆண்டுகளில் இருந்து தமிழர்களுடைய தாயக பிரதேசங்களை ஆக்கிரமித்துக் கொண்டு சிங்கள குடியேற்றங்களை நிறுவி அதன் மூலமாக தமிழர் தாயகத்தை சிதைத்து வருகின்ற நிலையில் தமிழர் தலைவர்களும் சிங்கள தலைவர்களும் தமிழ் தேசத்தின் உடைய இறைமையை வேண்டி ஒப்பந்தங்களை செய்தது வரலாறு. அந்த ஒப்பந்தங்கள் எல்லாம் கிழித்தறியப்பட்டதன் பின்பாக எங்களுடைய தமிழீழத் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுடைய விடுதலைப் போராட்டம் எங்களுடைய தாயக சுதந்திரத்தை வேண்டி சர்வதேச அரங்கிலே இன்றைக்கு நிறுத்தப்பட்டிருக்கின்றது. எங்களுடைய மக்கள் தொடர்ச்சியாக இனவழிப்பு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் சிறிலங்கா தேசத்தின் சுதந்திர தினம் என்பது தமிழர்களுடைய கரிநாள் ஆகும் தமிழீழம் பிறக்கின்ற நாள் அன்றே உலகத்தமிழினத்தின் சுதந்திர நாள்

RELATED ARTICLES

Most Popular