திரைப்பட நடிகர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் விஜயகாந்த். இவர் கடந்த 1952 ஆம் வருடம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை ராமானுஜபுரம் கிராமத்தில் பிறந்தார். அதனைத் தொடர்ந்து, இவரது குடும்பம் சிறுவயதிலேயே மதுரைக்கு குடி பெயர்ந்தது. மதுரையில் வளர்ந்த விஜயகாந்த் சினிமா மீது மோகம் கொண்டு படிப்பின் மீது ஆர்வம் காட்டாமல், தந்தையின் கண்காணிப்பில் இயங்கி வந்த அரிசி ஆலையில் சிறு சிறு பணிகளை செய்து வந்தார்.
கடந்த வாரம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நல குறைவால் இறந்துவிட்டார். மேலும் இவருடைய இறப்பு செய்தியை கேட்டு தமிழ் சினிமாவை சேர்ந்த ரஜினி, கமல் , விஜய் போன்ற பல நடிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார்கள். ஆனால் தமிழ் சினிமாவை சேர்ந்த பாதி பிரபலங்கள் அந்த பக்கம் கூட எட்டிப் பார்க்கவில்லை என்பதுதான் சோகமான விஷயமே .
மேலும் கேப்டன் விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது பாரபட்சம் பார்க்காமல் எல்லா நடிகர்களுக்கும் உதவி செய்திருந்தார் . ஆனால் அந்த நன்றியை பாதி நடிகர்கள் மறந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதோடு நடிகர் சங்கம் கேப்டன் விஜயகாந்தின்,
இறப்பில் பெரிய அளவில் பங்கேற்கவில்லை . இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களாக தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்து அவசர அவசரமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர் . அதற்கும் ஒரு காரணம் இருக்கிறதாம் .
அது என்னவென்றால் கலைஞர் நூற்றாண்டு விழா நடக்கவுள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . அந்த விழாவிற்கு தமிழ் சினிமாவை சேர்ந்த எல்லா பிரபலங்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாம் . இதனால் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு செல்லாமல் ,
அங்கு சென்றால் கண்டிப்பாக அங்கு இது பற்றி கேள்வி கேட்பார்கள் என்பதற்காக தான் கேப்டனின் நினைவிடத்தில் கூட்டம் கூட்டமாக குவிக்கிறார்கள் தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் . இதோ அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்களின் புகைப்படங்களை நீங்களும் பாருங்க…