தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மூன்றாவது மகனாவார். யுவன் சங்கர் ராஜா சென்னையில் உள்ள செயின்ட் பேட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.

பத்தாம் வகுப்புக்குப் பிறகு தனது கல்வியை நிறுத்தினார்.அவர் ஜேக்கப் மாஸ்டரிடமிருந்து இசையைக் கற்கத் தொடங்கினார்.சென்னையில் உள்ள “மியூசி மியூசிகல்” இல் பியானோ வகுப்புகளில் கலந்து கொண்டார்.இது இங்கிலாந்தின் லண்டனில் உள்ள டிரினிட்டி கல்லூரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இவர் 1996 ஆம் ஆண்டு தனது தாயின் ஆலோசனைப்படி ஒரு ஆல்பத்திற்கு இசையமைக்க தொடங்கினார்.
அரவிந்தன் திரைப்பட தயாரிப்பாளர் டி சிவா சில ட்யூன்களைக் கேட்டதும் ட்ரைலர் இசை அமைக்க சொன்னார்.இவர் இசையில் ஈர்க்கப்பட்டார். அந்தப் படத்தின் ஒலிப்பதிவு உட்பட முழு படத்தொகுப்பையும் இசையமைக்கும் பணியை யுவன் ஷங்கரிடம் கொடுத்தார்.
தனது 16 வயதிலேயே ஒரு திரைப்படத்திற்கு இசையமைத்தார். இந்த படத்தில் இவர் அமைத்த இசையானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெறவில்லை.அதை தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு வெளியான வேலை, கல்யாண கலாட்டா போன்ற படங்கள் தோல்வியை சந்தித்தனர்.
அதன் பிறகு இவரிடம் எந்த ஒரு பட வாய்ப்புகளும் கொடுக்கவில்லை .அதன் பிறகு இயக்குனர் வசந்த் அவருடைய ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ என்ற படத்திற்கு இசையமைக்குமாறு யுவனிடம் கேட்டார்.அதை அவர் ஒப்புக்கொண்டு இந்த படத்திற்கு இசையமைத்து அமைத்துக் கொடுத்தார். இப்படத்தின் மூலம் நிறைய பாராட்டுக்கள் குவிந்தனர்.
அதன் பிறகு இயக்குனர் சுந்தர் சி உடன் இணைந்து உனக்காக எல்லாம் உனக்காக, ரிஷி, ஆகிய இரண்டு படங்களுக்கு பணியாற்றினார். பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில்,அஜித் நடிப்பில் வெளியான ‘தீனா’ படத்தில் இவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளராக பணியாற்றினார்.இவரின் முதல் வெற்றி படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து இவர் தமிழில் நந்தா ,ஜூனியர் சீனியர், மௌனம் பேசியதே ,புது கீதை ,தென்னவன், பேரழகன் ,புதுப்பேட்டை ,பட்டியல் போன்ற பல படங்களில் இசையமைத்துள்ளார்.
இவர் 2006 ஆம் ஆண்டு சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக திரைப்பட அரசு விருதைப் பெற்றார் .2004 ஆம் ஆண்டு ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருதை பெற்றார்.2010 ஆம் ஆண்டு பையா படத்திற்காக விருப்பமான பாடலுக்கான விஜய் விருதையும் பெற்றார். 2018 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.
இவர் ஒளிப்பதிவாளர் ,இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், என்ன பன்முக திறமைகளை கொண்டு தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்துள்ளார்.2014 ஆம் ஆண்டு யுவன் சங்கர் ராஜா தான் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்து இருந்தார்.
அவருடைய முஸ்லிம் பெயர் அப்துல் ஹாலிக் . இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஜஃப்ரூன் நிஷா என்பவரை 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது இவர்களின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .