வடகிழக்கு பருவமழை காரணமாக பல பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் அடுத்த சில மணித்தியாலங்களில் மேலும் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு, ஊவா, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை, பொலன்னறுவை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வட மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய கனமழை மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.