Monday, May 20, 2024

டாப் ஹீரோக்கள் வேடிக்கை பார்க்க KPY பாலா செய்த வேலை..! இருந்த மொத்த காசையும் எடுத்துட்டு வந்துட்டேன்.. மக்கள் பணியில் KPY பாலா.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளின் மூலம் தமிழ்நாடு முழுவதும் பிரபலமான நபர் தான் பாலா. இவர் குக் வித் கோமாளி யில் கோமாளியாக களமிறங்கி பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளார்.

சமையல் நிகழ்ச்சி என்பதை மறக்கும் அளவிற்கு காமெடி நிகழ்ச்சியாகவே நாம் இதை பார்க்க தொடங்கி விட்டோம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு பாலாவின் காமெடியும் புகழின் காமெடியும் இந்த நிகழ்ச்சிக்கு தூண்களாகவே இருந்துள்ளது.

இந்த நிலையில் குக் வித் கோமாளியில் கிடைக்கப்படும் பரிசு பொருட்களை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவும் மனம் கொண்டவராகவே இருந்தார் பாலா. இதற்காகவே அவர் நிகழ்ச்சியில் ஜெயித்து பரிசுகளை வாங்க வேண்டும் என்று முழு ஆர்வத்துடன் பங்கேற்றார்.

தற்போது பாலா ஆம்புலன்ஸ் ஒன்றை பழங்குடியின மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். இந்தச் செய்தி சமூக வலைத்தளம் முழுவதும் பாராட்டுக்கு உள்ளானது.

இவர் கிராம மக்களுக்கு உதவியாக ஆம்புலன்ஸ் வழங்கி வருகிறார்,மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பண உதவியும் செய்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular