Monday, May 20, 2024

வாவ்.. கியூட் ஸ்மைல்.. சேலையில் கிரிக்கெட் விளையாடி அசத்தும் நயன்தாரா ரீல் மகள் அனிகா.!

2010ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த “கத திடருன்னு” என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்தர். இதையடுத்து 2015ம் ஆண்டு அஜித் மற்றும் அனுஷ்கா நடிப்பில், கெளதம் மேனன் இயக்கிய “என்னை அறிந்தால்” திரைப்படத்தில் தமிழில் அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளார். மேலும் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுகளையும் வென்றுள்ளார்.

மேலும் 2019ம் ஆண்டு அஜித் மட்டும் நயன்தாரா நடித்த “விஸ்வாசம்” படத்திலும் அஜித்தின் மகளாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். ஜூனியர் நயன்தாரா என்று அழைக்கப்படும் இவர் தற்போது கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான “ஓ மை டார்லிங்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் அனிகா. இந்த நிலையில், இவர் தற்போது தன்னுடைய 19வது பிறந்த நாளை அவரது தாயுடன் கொண்டாடியுள்ளார்.

தற்போது இவர் லேட்டஸ்ட் புகைப்படங்கள் பயங்கர ட்ரெண்ட் ஆகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் விஸ்வாசம் அனிகாவா இது அடடே அசத்துறாங்களே என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இவர் சேலையில் கிரிக்கெட் விளையாடி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular